ADDED : டிச 17, 2024 12:08 PM

சென்னை: கனிமவள ஊழல் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆனார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். அவர் கனிவளத்துறை அமைச்சராக இருந்த போது, குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை விட, 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு, பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இன்று (டிச.,17) சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆனார். அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.