sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி

/

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி

3


ADDED : பிப் 21, 2026 05:22 PM

Google News

3

ADDED : பிப் 21, 2026 05:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா நிச்சயம் வாழ்த்தும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி;

3வது இடத்தில் இருக்கும் (தவெக) பற்றி நாங்கள் பேசுவது கிடையாது. இது எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. இது முதல்வரின் ராஜதந்திரம். அரசியலில் சிறப்பாக காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கிற ஒரு அரசியல் தலைவர் ஸ்டாலின் என்ற பெயரை பல வட நாட்டு தலைவர்களிடம் இருந்து அவர் பெற்றிருக்கிறார்.

தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு 200 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும். இந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. போட்டியாக யார் வந்தாலும் நாங்கள் எல்லா கட்சிகளையும் சம நிலையாக தான் பார்ப்போம். வெற்றிக் கோட்டை நெருங்கி கொண்டு இருக்கிற, ஒரு கூட்டணி எங்கள் கூட்டணி.

நிச்சயமாக 200 தொகுதிகளை தாண்டி கைப்பற்றுவோம், பல சர்வேக்கள் அதை சொல்லி இருக்கின்றன. இது முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்திருக்கிற சிறப்பு. கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து எப்படி கொண்டு செல்வோம் என்பதை தான் பார்ப்போம்.

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையம் அரவணைத்து இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரியாக கூட்டணியை வைத்துக் கொண்டு இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். தோழமைக்கு மதிப்பு தருகிற ஒரே அரசியல் தலைவர் அவர்.

அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு ஒன்று தான். எல்லோரையும் தோழமையுடன் நடத்துவோம், எல்லோருக்குமான ஆட்சியாக தான் இந்த ஆட்சி இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் முதல்வர் ஸ்டாலினின் சாணக்யதனத்தை பார்ப்பீர்கள்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா ஏற்காது என்று பாஜ சொல்லக்கூடாது. விஜயகாந்தின் வாரிசுகள் சொல்ல வேண்டும். பாஜ ஒன்றும் விஜயகாந்தின் வாரிசு அல்ல. விஜயகாந்துக்கு அவர்கள் எதுவும் செய்தது கிடையாது.

2016ம் ஆண்டிலே அவர்(விஜயகாந்த்) திமுக கூட்டணிக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் அன்றைக்கு மடைமாற்றி விட்டார்கள். அதை தான் அவரின் துணைவியார் பிரேமலதா நிறைவேற்றி இருக்கிறார்.

நிச்சயமாக விஜயகாந்தின் ஆவி, ஆத்மா என்று எதுவாக நீங்கள் சொன்னாலும் அது இந்த கூட்டணியை வாழ்த்தும், வரவேற்கும், இது தமிழக மக்களுக்கு தேவையான கூட்டணி என்றும் சொல்லும்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.






      Dinamalar
      Follow us