sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனி நாம் தான்; இனி எப்போதுமே நாம் தான்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேச்சு

/

இனி நாம் தான்; இனி எப்போதுமே நாம் தான்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேச்சு

இனி நாம் தான்; இனி எப்போதுமே நாம் தான்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேச்சு

இனி நாம் தான்; இனி எப்போதுமே நாம் தான்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேச்சு

10


UPDATED : பிப் 21, 2026 06:22 PM

ADDED : பிப் 21, 2026 05:27 PM

Google News

10

UPDATED : பிப் 21, 2026 06:22 PM ADDED : பிப் 21, 2026 05:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''இனி நாம் தான், இனி எப்போதுமே நாம் தான்,'' என்று மதுரையில் நடந்த திமுக தென் மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தென் மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு மதுரை உத்தங்குடியில் இன்று (பிப்.,21) மாலை துவங்கியது. 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

'மதுரை என்றால் வீரம், பாசம். மதுரை என்றாலே எல்லாமே பேமஸ்தான். இனி நாம தான், இனி எப்போதுமே நாம தான் என்ற நம்பிக்கை, இந்த மாநாட்டில் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நம்பிக்கை அதிகரிக்கிறது. உத்தங்குடி முழுவதும் உடன்பிறப்புகள் குடியேறி விட்டதைப் போல இந்த மாநாடு இருக்கிறது.

எஸ்.ஐ.ஆர்., பணியின்போது பம்பரமாக உழைத்தோம். தேர்தலுக்கும் அதற்கும் வேறுபாடு இல்லை. எஸ்.ஐ.ஆர்., பணியின்போது வாக்காளர்களை நீக்க விடாமல் உழைத்த இயக்கம் திமுக.

பிரதமரை கேளுங்கள்

மதுரை வரும் பிரதமரிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். கல்வி நிதி ஏன் தரவில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையை ஏன் வெளியிடவில்லை. மதுரை எய்ம்ஸ் ஏன் வரவில்லை என்று கேட்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் பற்றியும் கேட்க வேண்டும்.ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்பு திட்டங்களும் தரவில்லை என்று பிரதமரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.அமைச்சர்களுக்கு மத்திய பாஜ அரசு அழுத்தம் கொடுக்கிறது. மிசா, தடா தொடங்கி சிபிஐ., ஈ.டி.,வரை நாங்கள் பார்க்காத வழக்கா? ரெய்டா? அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் என்ன இபிஎஸ் போல பயந்தாங்கொள்ளியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை கேட்க துணிச்சல் இல்லாத துரோகியாக மாறி விட்டார் இபிஎஸ்.,இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பாலங்கள் திறப்பு

முன்னதாக, மதுரையில் இன்று (பிப்.,21) முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைத்தார்.மதுரை விமான நிலையத்திற்கு காலை 10:30 மணிக்கு விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், வடபழஞ்சி எல்காட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதை தொடர்ந்து மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வைகை ஆற்றின் குறுக்கே தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.திருமங்கலம் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகளும் முடிக்கப்பட்டு, திருமங்கலம் - கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டது.அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து 10,93,000 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அழகுற மறுசீரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா,விரிவுபடுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையம், 150 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றையும் இன்று திறந்து வைத்தார்.

இந்தத் திட்டங்கள் தென் தமிழகத்தின் போக்குவரத்து மற்றும் வரலாற்றுப் பெருமையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

மாமதுரையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மேலும் இரண்டு பாலங்கள்

கலைஞர் நூற்றாண்டு நூலகம்,

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்,

கீழடி அருங்காட்சியகம்,

உலகத்தரத்திலான ஹாக்கி மைதானம்,

வீர மங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்

உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து,

இன்று,தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” -

திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்”

சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை, 10,93,000 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அழகுற மறுசீரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா, Pinnacle Infotech நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையம், 150 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட ஹச்சிஎல் நிறுவனத்துடன் எம்ஓயு உள்ளிட்டவைகளையும் இன்று திறந்து வைத்திருக்கிறேன்.

அடுத்து வரும் நமது திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் மாமதுரைக்கான வளர்ச்சிப் பணிகள் பன்மடங்காகித் தொடரும்.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us