மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்
மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்
ADDED : ஜூன் 30, 2025 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக பா.ஜ., வெற்றிக்கு வேண்டுதல்!
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தன் மனைவியை காண, நேற்று கோவை வந்தார் அமைச்சர்.
பின்னர் தன் மகனுடன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவரது மனைவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.