ADDED : டிச 28, 2024 03:19 AM
சென்னை: 'மாணவியர் அனைவரும், 'காவல் உதவி' மொபைல் செயலியை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதை, அனைத்து கல்லுாரிகளும் உறுதி செய்ய வேண்டும்' என, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஆபத்து காலங்களில், உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ள உதவும், 'காவல் உதவி' மொபைல் செயலியை, அனைத்து பெண்களும், குறிப்பாக மாணவியர் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில், 'சிவப்பு நிற அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் வழியாக, பயனாளர் விபரம், தற்போதைய இருப்பிட விபரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு, காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவியர் காவல் உதவி செயலியை, தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்வதை, அனைத்து கல்லுாரிகளும் உறுதி செய்ய வேண்டும். இந்த செயலியை, கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் போன்றவற்றில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

