களத்திற்கே வரவில்லை...! தி.மு.க.வின் 200 பற்றி விமர்சிப்பதா? நடிகர் விஜயை சாடிய அமைச்சர்
களத்திற்கே வரவில்லை...! தி.மு.க.வின் 200 பற்றி விமர்சிப்பதா? நடிகர் விஜயை சாடிய அமைச்சர்
ADDED : டிச 07, 2024 10:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இன்னும் களத்திற்கே வராதவர்கள் எல்லாம் தி.மு.க.,வின் 200 என்ற இலக்கை விமர்சிக்கிறார்கள் என்று நடிகர் விஜயை அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு;
வருகின்ற சட்டசபை தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர், அதிமேதாவிகளாக. தற்குறிகளாக, அரசியல் களத்திற்கே வராதவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களின் நிலைப்பாடு 200 அல்ல, 234யும் தி.மு.க., கைப்பற்றும்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, எப்பொழுது எல்லாம் தி.மு.க., மீது இப்படி அவதூறுகள் ஏற்படும் போது, பரப்பும் போது 80 கிமீ பயணித்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர் 100 கிமீ வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் 2026ல் ஸ்டாலினை முதல்வராக அரியணை ஏற்றும் வரை எங்களது வேகம் குறையாது.
இவ்வாறு அவர் பேசினார்.