ADDED : பிப் 18, 2024 02:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் ஒற்றுமையை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2014 பிப்ரவரி 9ம் தேதி, புதுச்சேரி ஆரோவில்லில் துவங்கிய நமது மாரத்தான் பயணம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 பிப்ரவரி 18ம் தேதியாகிய இன்று அதே ஆரோவில்லில் நம் 150வது மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நமது இச்சிறப்புக்குரிய முயற்சி இனியும் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.