பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 கிடைக்குமா? கிடைக்காதா? அமைச்சர் கொடுத்த விளக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 கிடைக்குமா? கிடைக்காதா? அமைச்சர் கொடுத்த விளக்கம்
ADDED : டிச 29, 2024 08:46 PM

கோவை: பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பரிசு அறிவிக்கப்படாதது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதோடு, ரூ.1,000 பரிசு தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில், 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், ரூ.1,000 ரொக்கப்பரிசு குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இதனால், ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படுமா? மாட்டாதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், மழை பேரிடர் மீட்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் இருந்து ரூ.37,000 கோடி பேரிடர் நிதி கோரப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கியது.
தற்போது வரை மாநில நிதியிலிருந்து ரூ.2,028 கோடி பேரிடருக்காக செலவிட்டுள்ளோம். இந்த சூழல் மாறும், எனக் கூறினார். அமைச்சரின் இந்தப் பேட்டியை தொடர்ந்தும், ரூ.1,000 ரொக்கப் பரிசு குறித்த தெளிவு மக்களுக்கு ஏற்படவில்லை.

