ADDED : ஜன 30, 2024 12:15 AM
சென்னை: ''செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மண்டல இணை இயக்குனர்களின் பணி ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
அரசு திட்டங்கள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளில், அத்திட்டங்களின் தகுதி மற்றும் பயன்கள் குறித்த சிறு குறிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். அப்போது தான், பொது மக்கள் பயன் பெற வசதியாக இருக்கும்.
மாவட்டங்களில் அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இடங்களுக்கு, செய்தியாளர்களை அழைத்துச் சென்று, அவை குறித்த செய்திகள் வெளிவர, மண்டல இணை இயக்குனர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாவட்டங்களில் ஏதாவது பிரச்னை எழும்போது, அதை கலெக்டரிடம் எடுத்துச் சென்று, சுமுகத் தீர்வு காண வேண்டும். செய்தித் துறை அலுவலர்கள், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.