ADDED : ஜன 05, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர்கள், துணை சபாநாயகர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மாலை நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் வருகை தந்தனர். கோவிலில், மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.