தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சர் நீண்ட விளக்கம்; எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்

 அமைச்சர் நீண்ட விளக்கம்; எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்

 அமைச்சர் நீண்ட விளக்கம்; எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்


ADDED : செப் 02, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச ட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - வில்வநாதன் : வே லுார் மாவட்டம், மாதனுாரில் உள்ள எம்.ஜி.ஆர்., கலைக்கல்லுாரியில், விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் விஸ்வநாதன்: உ றுப்பினரின் கோரிக்கையை வரவேற்கிறேன். தமிழகத்தில் தற்போது, 188 அரசு கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 115 கல்லுாரிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. 73 கல்லுாரிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டியுள்ளது.

வேலுார் மாவட்டத்தில், மொத்தம் 14 கல்லுாரிகள் உள்ளன. அதில், ஆறு அரசு கல்லுாரிகள், மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஐந்து சுயநிதி கல்லுாரிகள் உள்ளன.

சபாநாயகர் பிரபாகர்: விளையாட்டு அரங்கம் அமைத்து தருமாறு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால் போதுமானது.

அமைச்சர் விஸ்வநாதன்: எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில், விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலை கேட்கும்போது, 'அவசரப்பட்டு என்னிடம் எந்த கோரிக்கையையும் வைத்து விடாதீர்கள். ஒன்றிரண்டு முறை யோசித்து கேள்வி கேளுங்கள்' என்று சொல்வதை போல இருக்கிறது.

அமைச்சர் விஸ்வநாதன்: எதிர்க்கட்சி தலைவர் மிக அழகாக கருத்தை பதிவு செய்திருக்கிறார். நான் எதை பேசினாலும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நான் எதுவுமே பேசக் கூடாதா?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: உயர் கல்வித்துறை அமைச்சருடன் சேர்ந்து, விளையாட்டு அரங்கம் கட்டி கொடுக்கப்படும்.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us