தயாரிப்பாளர் சங்கம் 'பெப்சி' மோதல் அமைச்சர் பேச்சு
தயாரிப்பாளர் சங்கம் 'பெப்சி' மோதல் அமைச்சர் பேச்சு
ADDED : ஜூன் 24, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனமான 'பெப்சி'க்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சு நடந்தது.
சினிமா தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக, தயாரிப்பாளர்களுக்கு சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த, அமைச்சர் சாமிநாதன் பேச்சு நடத்தினார்.
இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நிர்வாகிகள் பூச்சி முருகன், கருணாஸ், பெப்சி தலைவர் செல்வமணி, செய்தித் துறை செயலர் ராஜாராம், செய்தித் துறை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.