கஞ்சா விற்றவனை காணவில்லை எம்.எல்.ஏ., காமராஜ் பேச்சு
கஞ்சா விற்றவனை காணவில்லை எம்.எல்.ஏ., காமராஜ் பேச்சு
ADDED : மே 14, 2026 02:27 AM
சென்னை:அ.ம.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ., காமராஜ் பேசியதாவது:
நான் த.வெ.க., அரசிற்கு, நேற்றுமுன்தினமே ஆதரவு அளித்து விட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கும் ஆதரவை கொடுப்பேன்.
என்னை ஒரு கட்சியில் இருந்து நீக்கினர். தமிழகத்தை காப்பாற்றவும், பாதுகாக்கவும் இருக்கும் முதல்வர், என்னை மட்டும் பாதுகாக்காமல்,ஆதரிக்காமல் விட்டுவிட மாட்டார்.
முதல்வராக பொறுப்பேற்ற நான்கு நாட்களில், திருச்சியில், 300க்கும் மேற்பட்ட ரவுடிகள், தானாக முன்வந்து சரண் அடைந்துள்ளனர். மாவட்ட எஸ்.பி.,யை பார்த்து, எங்களை எதுவும் செய்து விடாதீர்கள் எனக் கூறியுள்ளனர்.
விஜய் முதல்வரானதும், கஞ்சா விற்றவன், கள்ளக்கடத்தல் செய்தவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. முதல்வர் விஜய் ஆட்சியில், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா போதை ஒழிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
