ADDED : மே 27, 2026 07:15 AM
சென்னை: வேலுமணி அணியில் இருந்து திரும்பி வந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டசபை செயலரை சந்தித்து மனு அளித்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பிலான அ.தி.மு.க., அணியினர், த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையில் ஓட்டளித்தனர்.
இவர்களை கட்சி தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலுமணி அணியில் இருந்து த.வெ.க.,விற்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ரெட்டி, பழனிசாமி அணிக்கு திரும்பியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.
எனவே, அவர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பான கடிதத்தை, சபாநாயகர் பிரபாகரிடம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நேற்று, தலைமை செயலகம் வந்தனர்.
சபாநாயகர் அறைக்கு சென்றனர்; அங்கு அவர் இல்லை. எனவே, சட்டசபை செயலர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்தனர்.
