எம்.எல்.ஏ., மந்திரி பதவி இரண்டாம் பட்சம் தான்: சாத்துார் ராமச்சந்திரன்
எம்.எல்.ஏ., மந்திரி பதவி இரண்டாம் பட்சம் தான்: சாத்துார் ராமச்சந்திரன்
ADDED : மார் 04, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க நான் இருக்கிறேன். தொகுதியில் என்னை அண்ணாச்சி, அப்பா என்றும், குழந்தைகள் தாத்தா என்றும் அழைக்கின்றனர். எம்.எல்.ஏ., மந்திரி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். அது நிரந்தரம் இல்லை. அருப்புக்கோட்டை தொகுதி மக்களுடன் மிகப்பெரிய பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த உறவுகள் ஆயுள் உள்ள வரை இருக்கும். மீண்டும் மீண்டும் இந்த தொகுதியில் நான் தான் ஜெயிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். பா.ஜ., அ.தி.மு.க., தி.மு.க., தனித்தனியாக போட்டியிடுகின்றது. அதனால் தி.மு.க.,வின் வெற்றி பிரகாசமாக உள்ளது, என்றார்.

