தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எம்.எல்.ஏ., ஓய்வூதியம் ரூ.5,000 உயர்வு

எம்.எல்.ஏ., ஓய்வூதியம் ரூ.5,000 உயர்வு

எம்.எல்.ஏ., ஓய்வூதியம் ரூ.5,000 உயர்வு


ADDED : ஏப் 27, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ''முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக சட்டசபை, மேல்சபை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 30,000 ரூபாயிலிருந்து, 35,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் மாதம், 15,000 ரூபாயிலிருந்து, 17,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சட்டசபை, மேல்சபை முன்னாள் உறுப்பினர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் மருத்துவப்படி, 75,௦௦௦ ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான மருத்துவப்படி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விதிகளில் திருத்தம் செய்து, மீதமுள்ள, 25,000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us