மாணவர்களை கண்டிக்க உரிய அதிகாரம் வேண்டும்; எம்.எல்.ஏ., பிரின்ஸ் கோரிக்கை
மாணவர்களை கண்டிக்க உரிய அதிகாரம் வேண்டும்; எம்.எல்.ஏ., பிரின்ஸ் கோரிக்கை
ADDED : மார் 29, 2025 05:31 AM
சென்னை : ''போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது,'' என காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் வலியுறுத்தினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களின் மீது, காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்கின்றனர். சில இடங்களில் ஆசிரியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், புகார்கள் வருகின்றன. எனவே, புகார்களின் உண்மைத் தன்மையை விசாரிப்பது அவசியம்.
'பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பால் அடித்து கண்டிப்பது தவறில்லை' என, ஒரு வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க, உரிய அதிகாரம் இருக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை, தனிக் குழு அமைத்து விசாரித்து, அதன் பின் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.