ADDED : ஜூன் 07, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:புதிய மின் இணைப்பு பெற, மின் வாரியத்தின் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக தனியார், 'பிரவுசிங் சென்டரில்' விண்ணப்பிக்கும் போது, அங்குள்ள நபர்கள் விண்ணப்பதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு பதில், தங்களின் எண்களைப் பதிவிடுகின்றனர். இதனால், விண்ணப்ப நிலை தொடர்பாக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,களை, விண்ணப்பதாரர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
மேலும், மின் வாரியம் அனுப்பும் எந்த எஸ்.எம்.எஸ்.,களும் நுகர்வோருக்கு கிடைப்பதில்லை. எனவே, 'மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, கணினி மையம் அல்லது முகவர்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம்' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.