ADDED : நவ 17, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் 12; காக்காச்சி 10; மாஞ்சோலை 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.