தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரண்டு நாட்களுக்கு மிதமான மழை

இரண்டு நாட்களுக்கு மிதமான மழை

இரண்டு நாட்களுக்கு மிதமான மழை


ADDED : ஜன 31, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில், காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். பிப்., 3 முதல், 6 வரை, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us