ADDED : மார் 17, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல், 22ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே நேரம், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகலாம். வரும் 20 வரை வெப்பநிலை உயர்வு காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.