ADDED : ஏப் 17, 2026 04:28 AM

சென்னை: 'தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
வட கிழக்கு மத்திய பிரதேசம் முதல், தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரை, மஹாராஷ்டிராவின் விதர்பா, மரத்வாடா, கர்நாடகம், தமிழகத்தில் 1.5 கி.மீ., உயரத்தில், வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இன்று முதல், ஏப்., 22 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இதர பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகத்தில் இன்று முதல், ஏப்., 20 வரை, பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
இதனால், வெளியில் செல்வோருக்கு, அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக அசவுகரியம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
