தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழை


ADDED : ஜன 31, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தென்மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரியில் பரவலாக இன்று வறண்ட வானிலை காணப்படும்.

தென் மாவட்ட கடலோர பகுதிகளில், நாளை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us