ADDED : டிச 12, 2025 10:06 AM

சென்னை: 'தமிழகத்தில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும் நாளையும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
