ADDED : ஜன 03, 2026 02:13 AM

சென்னை: 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் குன்னுார் தபால் தந்தி அலுவலகம் பகுதியில், அதிகபட்சமாக 26 செ.மீ., மழை பெய்து உள்ளது.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் . குளிர் காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இன்று குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைவாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
