மேற்கு மாவட்டங்களில் இன்று மிதமான மழை வானிலை மையம் தகவல்
மேற்கு மாவட்டங்களில் இன்று மிதமான மழை வானிலை மையம் தகவல்
ADDED : ஜன 16, 2026 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வானிலை ஆய்வு மைய அறிக்கை:
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் விலக உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிற பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

