உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 24, 2026 04:33 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மன்னார் வளைகுடா முதல், மேற்கு விதர்பா வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி உட்பட, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில், நாளை மறுநாள் முதல் வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
