தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமான மழை

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமான மழை

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமான மழை


ADDED : பிப் 02, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், சில இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இதர இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், சில இடங்களில் அதிகாலை மிதமான பனிமூட்டம் காணப் படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.

தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us