ADDED : செப் 03, 2026 01:05 AM

சென்னை, செப். 3-
'இன்று, 10 மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
அதனால், இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், இயல்பை ஒட்டியும், உள் தமிழகத்தில் இயல்பை விட, 5 டிகிரி செல்ஷியஸ் வரையும், கூடுதல் வெப்பமும் பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
