உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 03, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
நடிகை திரிஷா சில நாட்களாக லண்டனில் இருக்கிறார். இது ஏன் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கிறார்.
மேலும் ராதிகா, அபர்ணா பாலமுரளி ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், உளவியல் சார்ந்த திகில் கதையில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.
'என் முதல் தமிழ் படம், முதல் உளவியல் படம், பெண்களை மையமாக வைத்து முதல் படம். இப்படி பல சிறப்புகள் இந்த படத்தில் உள்ளது' என்கிறார் ராஜா கிருஷ்ண மேனன்.
