தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்

இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்

இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்


ADDED : டிச 30, 2024 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புத்தாண்டு அன்றும் மழை தொடரலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்சமாக மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us