ADDED : டிச 16, 2025 06:43 AM

சென்னை: 'தமிழகத்தில், சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

