தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யும்

பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யும்

பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யும்


UPDATED : ஜூலை 30, 2025 07:01 AM

ADDED : ஜூலை 30, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2025 07:01 AM ADDED : ஜூலை 30, 2025 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:



தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட், 4 வரை, பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில், இன்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

நேற்று மாலை நிலவரப்படி, மதுரை விமான நிலைய பகுதியில், அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us