ADDED : ஜன 29, 2026 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில், நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.
தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி யில் இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

