தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நிலச்சரிவு அபாயம் அறிய நவீன சென்சார் கருவி

நிலச்சரிவு அபாயம் அறிய நவீன சென்சார் கருவி

நிலச்சரிவு அபாயம் அறிய நவீன சென்சார் கருவி


UPDATED : அக் 29, 2026 11:09 PM

ADDED : அக் 29, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:09 PM ADDED : அக் 29, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 125 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 23ம் தேதி பெய்த கனமழையில், நீலகிரி மாவட்டம் பர்லியார் அருகே, அரசு பஸ் நிலச்சரிவில் சிக்கியது. டிரைவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கும்விதமாக, அபாயகரமான பகுதியில், நவீன சென்சார் கருவி பொருத்த, தமிழக பேரிடர் மீட்பு துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குணால் தலைமையில், லவ்டேல், வேலிவியூ, தலையாட்டுமந்து, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில், 125 இடங்கள், நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. கன மழை சமயங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே தகவல் அளிக்க கூடிய சென்சார் கருவிகள் பொருத்த, பரிந்துரைக்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us