நமக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் மோடி பிரதமராகி விட்டார்
நமக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் மோடி பிரதமராகி விட்டார்
ADDED : பிப் 10, 2025 06:29 AM

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் அசைவம் சாப்பிட்டதாக, பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. தமிழர்கள் தமிழ், ஆங்கிலம் படித்ததால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஹிந்தி படிக்காததால், அவர்களுடைய வாழ்வில் எந்தக் குறையும் இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. அதனால் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை.
தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்தே, தமிழர்கள் அறிவு ஜீவிகளாகத்தான் உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தில் தமிழகம் சேராததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. 'இண்டி' கூட்டணிக்கு, 28 எம்.பி.,க்கள் கூடுதலாக கிடைத்திருந்தால், நாம் நினைத்ததையெல்லாம் சாதித்திருக்கலாம். அதிர்ஷ்டம் கைநழுவியதால், மோடி மீண்டும் பிரதமராகி விட்டார். இருந்தபோதும், மோடியை பார்த்து, தி.மு.க.,வுக்கு பயம் இல்லை. பா.ஜ.,வுடன் தி.மு.க.,வுக்கு எந்த உறவும் கிடையாது.
- கிரிராஜன், தி.மு.க., - எம்.பி.,

