ADDED : மார் 19, 2024 06:16 AM
சேலம் : சேலம் கெஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில், 44 ஏக்கரில் திடல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. பந்தல், பிரமாண்ட மேடை மற்றும் தாமரை திடல் முகப்பு உள்ளிட்டவை அமைக்கும் பணி நடக்கிறது. பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வகையில், 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 11:00 மணிக்கு பொதுக்கூட்டம் துவங்குகிறது. மதியம் 12.30 மணிக்கு பிரதமர் மோடி கூட்ட மேடைக்கு வரவுள்ளார். இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சேலம் - சென்னை பயணியர் விமான சேவை இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டிக்கு வர உள்ளார்.
பிரசாரம் முடித்த பின், ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம், டில்லி செல்ல உள்ளார். நேற்று வாகன அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

