ADDED : அக் 02, 2025 06:19 PM
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த நாளில் தினமலர் தனது வாசகர்களுக்கு சொன்ன ரகசியம் என்ன, தெரியுமா?
“தினமலர் பத்திரிகையை மக்கள் கையில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஆண்டு தோறும் நாங்கள் அனுபவித்து வருகிற பொருளாதார நஷ்டத்தை பார்த்தால் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கே பயமாக இருக்கும்.
“அதனால், நாங்கள் என்ன செய்கிறோம், தெரியுமா? அந்த கணக்கு வழக்கு இடம் பெறுகிற ஆடிட்டர் ரிப்போர்ட் பக்கத்தை திருப்பியே பார்ப்பது இல்லை. எங்களுக்கு தமிழர் நன்மை தான் முக்கியம், லாப நஷ்டம் எல்லாம் அதன் பிறகு தான்.
மக்களுக்கு சேவை செய்வது என்ற ஒரே லட்சியத்துடன் துணிந்து இறங்கிய பிறகு, தமிழ் மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறோமே தவிர, வேறு திசையில் நாங்கள் திரும்பி பார்க்கக்கூட விரும்பவில்லை” என்று வாசகர்களுடன் உள்ளத்தை பகிர்ந்து கொண்டார் தினமலர் நிறுவனர்.