ADDED : மார் 24, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொதுச்செயலர் தயாளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கொரோனா காலத்தில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட, சிறப்பு நிவாரண நிதியுதவி 15,000 ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.