கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்
கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்
ADDED : ஏப் 19, 2025 09:25 PM

திருநெல்வேலி: பணகுடி அருகே கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி தமது நான்கு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து பயந்த கணவரும் விஷம் குடித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே கடம்பன்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் 33. இளநீர் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி 30. இவர்களுக்கு கார்த்திகா 8, கிருத்திகா 6, முத்து நிவிஷா 3, வைதிகா 2 ,ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் கண்ணனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை புவனேஸ்வரி தெரிந்து மனம் உடைந்தார். இன்று அரளி விதைகளை அரைத்து தாமும் குடித்து குழந்தைகளுக்கும் கொடுத்தார். வீட்டில் மயங்கி கிடந்தனர். இன்று மாலை 4:30 மணிக்கு வீட்டுக்கு வந்த ராஜேஷ் கண்ணன், மனைவி குழந்தைகள் மயங்கி கிடப்பதை பார்த்து பயந்தார். அவரும் தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். அக்கம் பக்கத்தினர் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.