மக்கள் விரும்பினால் பன்னீர்செல்வம் தேனியில் போட்டி சொல்கிறார் எம்.பி., ரவீந்திரநாத்
மக்கள் விரும்பினால் பன்னீர்செல்வம் தேனியில் போட்டி சொல்கிறார் எம்.பி., ரவீந்திரநாத்
ADDED : மார் 02, 2024 01:36 AM
தேனி:தேனி ஐ.டி.ஐ.,யில் நலத்திட்ட துவக்க விழாவில்பங்கேற்ற எம்.பி., ரவீந்திரநாத் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் யார் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என்பதை நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து அறிவிப்பர். தொண்டர்கள், மக்கள் விரும்புவதை ஓ.பன்னீர்செல்வம் செய்வார். மக்கள் விரும்பினால் அவர் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
2019 தேர்தலில் நான் போட்டியிட்ட போது மக்கள் வைத்த சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற மற்றொரு வாய்ப்பு தரக்கோரி தேர்தலை சந்திப்போம்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கும், எங்களுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது. இரண்டு, மூன்று நாட்களில் இதில் முடிவு எட்டப்படும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆளும்கட்சியான தி.மு.க.,வே வேட்பாளர்கள் அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளனர், என்றார்.

