சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த மூணாறு லக்கம் நீர்வீழ்ச்சி
சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த மூணாறு லக்கம் நீர்வீழ்ச்சி
ADDED : ஜன 16, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான வசதிகள் பாதுகாப்பாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
மூணாறைச் சுற்றி பெரியகானல், ஆற்றுக்காடு, நயமக்காடு உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றை ரசிக்க மட்டும் இயலும். குளிக்க இயலாது. ஆனால் மூணாறு -உடுமலைபேட்டை ரோட்டில் 25 கி.மீ., தொலைவில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் மட்டும் ரசிக்கவும், குளிக்கவும் அனுமதி உண்டு. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நீர்வீழ்ச்சியில் உடை மாற்றும் அறைகள் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமும் காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை நீர்வீழ்ச்சியை ரசித்தும், குளித்தும் மகிழலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.50.