ADDED : அக் 12, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் செல்வம், பெங்களூரு சதாசிவம் நகரில் தங்கியிருந்தபோது, நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது,
அவருடைய உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தி.மு.க., தொண்டர்கள் என, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு, சக்கர நாற்காலியில் வந்து, செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று மாலை, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

