ADDED : ஜன 01, 2024 06:19 AM

திருநெல்வேலி : துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் முத்து பெருமாள், 25; தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று காலை, 9:00 மணிக்கு திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே சென்றபோது, மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட கருங்குளம் அருகே காரசேரியை சேர்ந்த முத்து, இசக்கி ஆகிய வாலிபர்களை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர்.
இறந்த முத்து பெருமாள் பட்டியலினத்தை சேர்ந்தவர். கைதான மற்றும் தேடப்படுபவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். திருநெல்வேலியில் ஏற்கனவே நடந்து வரும் ஜாதி கொலைகளின் பின்னணியில் இந்த கொலையும் நடந்துள்ளதா என போலீசார் விசாரித்தனர்.
இரு தரப்பினர் ஊர்களும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளதால், முன் விரோதம் காரணமா என்றும் விசாரணை நடக்கிறது.
உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கொலை செய்யப்பட்ட முத்துபெருமாளின் உறவினர்கள், கிராமத்தினர் புளியங்குளம் அருகே திருச்செந்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.