உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 04, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
சென்னை; நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களை டிஜிட்டல் மயமாக்கி, பாதுகாக்கும் நடவடிக்கையை, மத்திய கலாசார துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, 'சி - டாக்' அமைப்பின் மென்பொருள் வாயிலாக, இந்த பணி தொடங்கி உள்ளது.
அருங்காட்சியகங்கள் அனைத்தும் 360 டிகிரியில், டிஜிட்டல் வடிவில் படமாக்கப்பட்டு, தேசிய டிஜிட்டல் அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட உள்ளன.
தற்போது வரை, தேசிய அளவிலான எட்டு அருங்காட்சியகங்கள், மத்திய தொல்லியல் துறையின் இரண்டு அருங்காட்சியகங்கள், புனேயில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் ஆகியவை, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்காக, https://museumsofindia.gov.in/repository என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன.
