உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 04, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
சென்னை; தமிழகத்தில் ஏழு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்றும், 210 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர், கறுப்பு பேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
