ADDED : அக் 24, 2025 01:35 AM

சென்னை:இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேஷ், 68, உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். இசையமைப்பாளர் தேவா இசையமைத்த படங்களுக்கு, பின்னணியில் பலம் சேர்த்தவர்கள், அவரது சகோதரர்களான சபேஷ் -மற்றும் முரளி.
இவர்களில், திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக இருந்த சபேஷ், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு, திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனோரமா மகன் மறைவு மறைந்த நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி, 70, உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக துாரத்து பச்சை என்ற படத்தை மனோரமா தயாரித்தார். அப்படம் தோல்வி அடைந்தது. பூபதியின் மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

