'முன்னாள் மேயர் முத்து சிலை என் தம்பி திறப்பது மகிழ்ச்சி'
'முன்னாள் மேயர் முத்து சிலை என் தம்பி திறப்பது மகிழ்ச்சி'
ADDED : மே 30, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரையில் முதல்வர் ஸ்டாலின் நாளை (மே 31) மதுரா கோட்ஸ் பாலம் அருகே முன்னாள் மேயர் முத்து வெண்கலச் சிலையை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பேசி வெளியிட்டுள்ள வீடியோ: அண்ணாதுரை காலத்தில் இருந்து கட்சியில் இருந்தார் முத்து. மதுரையில் தி.மு.க.,வை பலம் வாய்ந்த கட்சியாக உருவாக்கியவர். அதை என்னால் மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் அவரது உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். அவரது சிலையை என் தம்பி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பது மகிழ்ச்சி. இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

