ADDED : நவ 20, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நநாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஜெய்நகரை சேர்ந்த கார் டிரைவர் ஷெரீப் நவாஸ். இவர் கடந்த, 17ல் நாமக்கல்--சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார். தொடர்ந்து, பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு, பணி காரணமாக கோவைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் அதிகாலை, 1:00 மணிக்கு மர்ம நபர் பைக்கை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளத்தில் பரவி, வைரலாகி வருகிறது.

