sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

/

ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

1


ADDED : ஜன 18, 2026 07:09 PM

Google News

ADDED : ஜன 18, 2026 07:09 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வெல்வோம் ஒன்றாக' என்பதற்கு பதிலாக, 'போதைப் புழக்கத்தால் கொல்வோம் மொத்தமாக' என்று தான் திமுக கூற வேண்டும், என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை; திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பத்தில் போதையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை இயக்கியோரைத் தட்டிக் கேட்ட அப்பாவி இளைஞர்கள் இருவரை, போதைக் கும்பல் சரமாரியாகக் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த மாதம் போதையில் ரீல்ஸ் எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த வடமாநில இளைஞர் மீது போதைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, பின் சேலை வியாபாரி ஒருவரை மற்றொரு போதைக் கும்பல் இழுத்துச் சென்று தாக்கி முகத்தில் குத்தியது எனத் தொடர்ந்து திருவள்ளூரில் நடக்கும் கொடூரச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதை பேயையும், அதில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களையும் தெளிவாகக் காட்டுகிறது.

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால், மக்கள் நடமாடவே பயப்படும் வேளையில், 'வெல்வோம் ஒன்றாக' என்பதற்கு பதிலாக, 'போதைப் புழக்கத்தால் கொல்வோம் மொத்தமாக' என்று தான் திமுக கூற வேண்டும்! போதைப் பொருட்கள் மயமான முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை ஒழித்துத் தமிழகம் தனது சுயத்தை விரைவில் மீட்டெடுக்கும்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us